தரத்தை மேம்படுத்த கடந்த பத்து ஆண்டுகளில் 732 தயாரிப்புகளை உள்ளடக்கிய 174 தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற தர மேலாண்மை தொடரபான கருத்தரங்கில்  மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நிறைவு உரையாற்றினார். தரத்தை தொழில்துறை உற்பத்தியின் முக்கிய அம்சமாக மாற்றுமாறு தொழில்துறையினரை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் தேசத்தை கட்டமைப்பதில் அரசின் முயற்சிகளில் தரத்திற்கு முக்கிய இடம் அளித்து வருகிறார் என்று திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமரின் ‘குறைபாடற்ற தரமான உற்பத்தி விளைவுகள் அற்ற உற்பத்தி’ என்ற தொலைநோக்குப் பார்வை முக்கியம் என்று அவர் மேலும் கூறினார். பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகரும் நிலையான உற்பத்தி நடைமுறைகள் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்குக் கிரியா ஊக்கியாக இருக்கும் என்று அவர் கூறினார். ரூ. 1 லட்சம் கோடி அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை குறித்துப் பேசிய அவர், இந்த நிதியின் மூலம் தொழில்துறைக்கான புதுமைகளை அரசு ஆதரிக்கும் என்று கூறினார்.

2014-ம் ஆண்டு வரை 106 பொருட்களை உள்ளடக்கிய 14 தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மட்டுமே இருந்தன என்றும், கடந்த பத்தாண்டுகளில் 732 பொருட்களை உள்ளடக்கிய 174 தரக் கட்டுப்பாட்டு ஆணைகளாக அது விரிவடைந்துள்ளது என்றும் திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.  உலக அரங்கில் இந்தியா வலுவாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், தரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் திரு பியூஷ் கோயல் கூறினார்.

Leave a Reply