குழந்தை கடத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த தில்லியில் நாளை அரை மாரத்தான் போட்டி- ரயில்வே பாதுகாப்பு படையினர் பங்கேற்கின்றனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF -ஆர்பிஎஃப்) 20 அக்டோபர் 2024 அன்று தில்லியில் நடைபெறும் வேதாந்தா அரை மராத்தானில் பங்கேற்கிறது. ரயில்வே கட்டமைப்பில் குழந்தை கடத்தல் தடுப்பு முயற்சிகளை முன்னிலைப்படுத்தவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரை மராத்தான் நடைபெறுகிறது. இதில் 26 அர்ப்பணிப்புள்ள ஆர்பிஎஃப் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை ஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவ் வழிநடத்துவார்.

குழந்தை கடத்தலை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் சேருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதும் ஆர்பிஎஃப் பங்கேற்பதன் முதன்மை நோக்கமாகும். ரயில்களில் குழந்தை கடத்தலைத் தடுப்பது என்ற அடிப்படையில் கூட்டு நடவடிக்கையின் அவசரத்தையும் அவசியத்தையும் வலியுறுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்கவும், குழந்தை கடத்தலுக்கு எதிராக வலுவான ஆதரவை வழங்கவும், ஆர்.பி.எஃப் பொதுமக்களை அழைக்கிறது. ஒன்றிணைந்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய முடியும் என்பதுடன் நாட்டின் ரயில்வே கட்டமைப்பில் கடத்தலை ஒழிக்கப் பணியாற்ற முடியும்.

Leave a Reply