வேளாண் துறை ஏற்பாட்டில் விவசாயம் குறித்த தேசிய மாநாடு – ரபி பிரச்சாரம் 2024.

முந்தைய பயிர் பருவங்களில் பயிர் செயல்திறனை ஆய்வு செய்யவும், ரபி பருவத்தில் பயிர் வாரியான இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் புதுதில்லியில்  ரபி பிரச்சாரம் 2024- க்கான விவசாயம் குறித்த தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அத்தியாவசிய வேளாண் உள்ளீடுகளை சீராக வழங்குவதை உறுதி செய்வதற்காக புதுமையான வேளாண் நடைமுறைகள் மற்றும் டிஜிட்டல் முயற்சிகள் குறித்து அனைத்து பங்குதாரர்களிடையேயும் விவாதங்களை ஊக்குவிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டது அதிநவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி அதன் மூலம் பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆதரவு அளிக்கிறது.

 மாநாட்டில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சவுகான், “உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இயற்கை மற்றும் இயற்கை விவசாயத்தை நோக்கி நாம் நகர வேண்டும். உற்பத்திச் செலவைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்கி, ஒரு ஹெக்டேருக்கு மகசூலை அதிகரிப்பதே இதன் நோக்கம்” என்றார். கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க போக்குவரத்து செலவைக் குறைக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை உலகின் மிகப்பெரிய உணவுக் களஞ்சியமாக மாற்ற, வேளாண் பருவநிலை நிலைமைகளின் அடிப்படையில் உற்பத்தியை அதிகரிக்க மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். 2024-25 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியின் தேசிய இலக்கு 341.55 மில்லியன் டன்களாக இருக்கும். அமைச்சர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள் அளிக்கும் ஒவ்வொரு ஆலோசனையின் மீதும் மத்திய அரசு ஒத்துழைப்புடன் செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மாநாட்டில், மத்திய வேளாண் இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர், வெள்ளம் மற்றும் புயலால் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சந்தையில் விநியோகிக்கப்படும் வேளாண் இடுபொருட்களின் தரத்தை மூத்த அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply