தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலையிலும், மாலையிலும் ஒரு ஒரு மணி நேரம் கூட்ட வேண்டும்!- ஜி‌.கே.வாசன் வலியுறுத்தல்.

பட்டாசு வெடிப்பதற்கு கடைபிடிக்க வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் பள்ளி,கல்லூரிகளில் அறிவிப்பு பலகையில் எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்

தமிழக அரசு தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க ஒதுக்கியிருக்கும் நேரத்தை கூட்ட
வேண்டும் என்ற பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்ற அறிவிப்பு இந்த
வருடமும் வெளியாகி காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் என்று குறிப்பிட்ட நேரம்
ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது கடந்த 4 ஆண்டுகளாக தொடர்கிறது. இருப்பினும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும்
பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு தமிழக அரசு காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம்
என்று பட்டாசு வெடிக்க ஒதுக்க வேண்டும்.
அப்போது தான் நேரக்குறைவால் நாள் முழுவதும் பல நேரங்களிலே வாங்கிய பட்டாசை
வெடிப்பது என்பது குறையும். மேலும் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படாத பட்டாசுகளை
வெடிக்க அறிவுறுத்த வேண்டும்.
மிக முக்கியமாக பொது மக்கள் பட்டாசு வெடிக்க காவல்துறையால் விதிக்கப்பட்டுள்ள
கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை
ஆகியவற்றை இந்த வாரம் பள்ளி, கல்லுரிகளில் மாணவர்களுக்கு அரசு சார்பிலே விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும்.
முக்கியமாக தமிழக அரசு பள்ளி, கல்லுரிகளில் பட்டாசு வெடிப்பது சம்பந்தமான
விழிப்புணர்வுக்கு அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்
சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply