மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் ஆகியோரின் தலைமையில் பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் இன்று கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம், தில்லி தேசிய தலைநகர் மாநில வேளாண் அமைச்சர் கலந்து கொண்டனர் . பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் , சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லி என்.சி.டி மாநில அரசுகளின் அமைச்சர்கள், நெல் பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும், நெல் பயிர்க் கழிவுகளை எரிக்காமல் நிர்வகிக்க விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தெரிவித்தனர். பானிபட்டில் 2 ஜி எத்தனால் ஆலைக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அடையாளம் கண்ட கிளஸ்டர்களில் மேற்கூறியவற்றுடன் கூடுதலாக பேல்களை தயாரிப்பதன் மூலம் பயிர் எச்சங்களை நிர்வகிப்பதற்காக ஏக்கருக்கு ரூ .1000 / -, கூடுதலாக ரூ .500 / மெட்ரிக் டன் கூடுதலாக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் சலுகைகளை ஹரியானா அரசு அறிவித்தது, பொதுவான நிர்ணயிக்கப்பட்ட நெல் வைக்கோல் வீதம் ரூ 2500 / மெட்ரிக் டன், போக்குவரத்து கட்டணம் ரூ 500 நெல் வைக்கோல் பேல்களின் நுகர்வுக்காக கோசாலைகளுக்கு அதிகபட்சம் ரூ .15000 வரை வழங்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பஞ்சாபில் 35% குறைவாகவும், ஹரியானாவில் 21% குறைவாகவும் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், எதிர்காலத்தில் எரிப்பு சம்பவங்கள் நிகழக்கூடிய ஹாட்ஸ்பாட் மாவட்டங்களை அடையாளம் கண்டு, தேவையான அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதன் மூலம் நிலைமையை திட்டமிட்டு கையாளுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் தில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபடுவதை எதிர்கொள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லி தலைநகர் பிராந்திய மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏற்கனவே நிதி உதவி அளித்து வருகிறது. நடப்பாண்டில், மொத்த ஒதுக்கீடான ரூ.600 கோடியில், ரூ.275 கோடி நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் பயிர் கழிவு மேலாண்மை இயந்திரங்களின் பயன்பாட்டை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
திவாஹர்