விசாகப்பட்டினம் தேசிய எஃகு ஆலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2024 இன்று தொடங்கப்பட்டது, வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் பொறுப்பு தன்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி “ஒருமைப்பாடு உறுதிமொழி” எடுக்கப்பட்டது.
தேசிய எஃகு ஆலையின் தலைமை நிர்வாக கட்டிடத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஏ.கே.சக்சேனா தலைமையில் சி.எம்.டி (கூடுதல் பொறுப்பு), தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி மற்றும் இயக்குநர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில் உரையாற்றிய தேசிய எஃகு ஆலையின் முதன்மை மேலாண் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு ஏ.கே.சக்சேனா, நெறிமுறை தரங்களை நிலைநிறுத்துவதிலும், ஒருமைப்பாடு செயல்பாடுகளின் அடித்தளமாக இருக்கும் சூழலை வளர்ப்பதிலும் ஒவ்வொரு தனிநபரின் பங்கையும் வலியுறுத்தினார். விழிப்புணர்வை ஒரு கடமையாக மட்டுமல்லாமல், நியாயமான மற்றும் நம்பகமான பணியிடத்தை உருவாக்குவதற்காக அனைவருக்குமிடையில் பகிரப்பட்ட பொறுப்பாகவும் எடுத்துக் கொள்ளுமாறு அவர் ஊழியர்களை ஊக்குவித்தார். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான அமைப்புகளை வலுப்படுத்தவும், அரசு வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகும் தரப்படுத்தப்பட்ட கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவும் அவர் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்