மேம்பட்ட உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவின் வேளாண்-உணவுத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரிக்-தேசிய வேளாண்-உணவு உயிரி உற்பத்தி நிறுவனம் பிரிக்-தேசிய வேளாண்-உணவு உயிரி உற்பத்தி நிறுவனம் (BRIC-NABI) என்ற இந்தியாவின் முதலாவது உயிரி உற்பத்தி நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (28.10.2024) திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விவசாயத்தில் புதுமைகளை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அரசின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
பயோ இ 3 கொள்கை போன்ற சமீபத்திய முக்கிய முடிவுகளை எடுத்துரைத்த அவர், அறிவியல், தொழில்நுட்பத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். பிரத்யேக உயிரி தொழில்நுட்பக் கொள்கையை அமல்படுத்திய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
திவாஹர்