மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 22, 2024 அன்று, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), சியரா லியோனில் இருந்து வந்த லைபீரிய நாட்டுப் பயணியைச்சோதனையிட்டது. பயணியின் உடைமைகளை ஆய்வு செய்தபோது, அது வழக்கத்திற்கு மாறாக இருந்ததாக டிஆர்ஐ அதிகாரிகள் சந்தேகித்தனர். முழுமையான சோதனையில், டிராலி பையின் அடிப்பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற தூள் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. களச் சோதனையில் அந்தப் பொருள் கோகோயின் என உறுதிப்படுத்தப்பட்டது,
மொத்தம் 3496 கிராம் எடையுடைய அந்தப் பொருளின் மதிப்பிடப்பட்ட சட்டவிரோத சந்தை மதிப்பு தோராயமாக ரூ. 34.96 கோடியாகும். பயணி கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை அகற்றுவதற்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் டிஆர்ஐ உறுதிபூண்டுள்ளது.
எம்.பிரபாகரன்