ராணுவ தளபதி திரு உபேந்திர திவேதி நேபாள பயணத்தை நிறைவு செய்தார்.

நேபாளத்தில் 5 நாள் அரசு முறை பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று நாடு திரும்பினார். இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு, கலாச்சார உறவுகள், பரஸ்பர மரியாதை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்ப்பதில் இந்திய – நேபாள ராணுவங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது.

அவரது பயணத்தின் போது, திரு உபேந்திர திவேதி நேபாளத்தின் அரசியல், ராணுவ தலைவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

ராணுவ தளபதியின் பயணத்தின் முக்கிய அம்சங்கள்:

* நேபாள ராணுவ தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.

* ஜெனரல் உபேந்திர திவேதி, நேபாள ராணுவத்தின் தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலை சந்தித்து, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான  வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.

* சிவபுரியில் உள்ள நேபாள இராணுவ கட்டளை, பணியாளர் கல்லூரியில் எதிர்கால தலைவர்களுக்கு அறிவூட்டும் வகையில், “போரின் மாறிவரும் தன்மை” என்ற தலைப்பில் விரிவுரை வழங்கினார்.

* பொக்காராவில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் பேரணியில் திரு உபேந்திர திவேதி கலந்து கொண்டார்.

 இந்தப் பயணத்தின் முடிவுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கலாச்சார பரிமாற்றம், பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும் வகையில் கூட்டு ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply