ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி புனேவின் ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் எதிர்கால ராணுவத் தளபதிகளிடையே உரையாற்றினார்.

கிரிநகரில் உள்ள ராணுவ தொழில்நுட்ப  நிறுவனத்தில் உள்ள மெஹ்ரா அரங்கில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி புனேவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்ப பணியாளர் பயிற்சியில் பயிற்சி பெறும்இளம் ராணுவத் தளபதிகள் மற்றும் இந்திய இராணுவத்தின் அடுத்த தலைமுறை தலைவர்களிடையே உரையாற்றினார். அவரது ஆற்றல்மிக்க பேச்சு மற்றும் தொலைநோக்கு மிக்க வார்த்தைகள் அதிகாரிகளான மாணவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நவீன போர்முறையின் சவால்களை அசைக்க முடியாத உறுதியுடனும், இடைவிடாத ஆர்வத்துடனும் எதிர்கொள்ள அவர்களுக்கு உத்வேகம் அளித்தது.

பாதுகாப்புக்கான தயார்நிலை என்பது ஒரு தேவை மட்டுமல்ல;  அது ஒரு கலை மற்றும் திட்டமிடல் ஆகும் என்று ஜெனரல் உபேந்திர திவேதி பேசினார். இந்திய சூழலில் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எடுத்துரைத்த அவர், இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றத்தக்க முயற்சிகளை எடுத்துரைத்தார்.

இயற்கை பேரழிவுகளின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், விரக்தியடைந்த காலங்களில் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதில் ஈடு இணையற்ற பங்களிப்பு குறித்தும் அவர் பெருமிதத்துடன் பேசினார். ஆபத்து சூழல் மிக்க பகுதிகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதில் ராணுவத்தின் துணிச்சலை அவர் பாராட்டினார். வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் காட்டப்படும் ஒற்றுமையின் சக்தியை சுட்டிக் காட்டினார்.

Leave a Reply