ராணுவம், ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையிலான பணிக்குழுவின் நான்காவது கூட்டம் மாஸ்கோவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ராணுவம், ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகள் இடையிலான பணிக்குழுவின் நான்காவது கூட்டம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால உத்திசார் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் இந்தியா சார்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் ரஷ்யா சார்பில் கூட்டு ஆயுதப்படை இயக்குநரகத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டிலெவ்ஸ்கி இகோர் நிகோலேவிச் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றன. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா-ரஷ்யா நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பு குறித்த பிரகடனம் கடந்த 2000-மாவது ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.

Leave a Reply