தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் வரை மழை நீடிக்கும். வங்கக்கடலில் உருவாகும் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040