இந்திய சர்வதேச அறிவியல் விழா 2024-ஐ ஒட்டி நாடு முழுவதும் உள்ள நிறுவனத் தலைவர்களின் வட்ட மேசையில் உரையாற்றுகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான புத்தொழில் இணைப்புக்கு அழைப்பு விடுத்தார்.
வட்டமேசை கூட்டத்தில் அனைத்து முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உகந்த இலக்குகளை அடைவதற்கு ஆராய்ச்சி, கல்வித்துறை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் முழுமையான ஒருங்கிணைப்பை அமைச்சர் வலியுறுத்தினார். வளர்ந்த நாடாக இந்தியாவை நோக்கி பயணிப்பதில் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கிய பங்கை அவர் சுட்டிக் காட்டினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் திறனைப் பயன்படுத்தவும், அற்புதமான வளர்ச்சியுடன் முன்னேறவும், கல்வியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையை உள்ளடக்கிய ஒரு கூட்டு அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார்,
டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் பிரத்யேக சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதன் செழுமையான பாரம்பரிய அறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து, இது ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது. நமது பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுடன் இணைக்கும்போது, உலக அரங்கில் நம்மை தனித்து நிற்கும் பிரத்யேக இந்திய கலவையை உருவாக்குகிறீர்கள், என்றார்.
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையானது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான அதன் திறனைக் குறிப்பிட்டு, இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று அமைச்சர் பாராட்டினார். பயோடெக் மற்றும் விண்வெளித் துறைகளில் இருந்து எடுத்துக்காட்டுகளை வரைந்து, இந்தியாவின் விஞ்ஞான முயற்சிகளை பெருக்க சர்வதேச நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை தலைவர்களை கொண்டு வரும் உலகளாவிய கூட்டாண்மைகளை அதிகரிக்க அழைப்பு விடுத்தார்.
எம்.பிரபாகரன்