சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தான் எழுதிய பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தான் எழுதிய பதிவைப் பகிர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள நமது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று மீண்டும் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“நாடு முழுவதும் உள்ள நமது மாற்றுத்திறனுடைய சகோதர, சகோதரிகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்கு எங்கள் அரசும் உறுதிபூண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவர்களுக்காக நாங்கள் எடுத்த கொள்கைகளும், முடிவுகளும் இதற்கு நேரடிச் சான்றாகும். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று, எனது உள்ளார்ந்த வார்த்தைகளை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்…
திவாஹர்