கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் CBI விசாரணைக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. CBI இந்த வழக்கை விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம்? கள்ளச்சாராய மரணங்களுக்கு திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? உச்சநீதிமன்றத்தில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அதிமுக தொடர்ந்து போராடும்!
இவ்வாறு எடப்பாடி கே பழனிசாமி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா