காசநோய் இல்லா இந்தியா இயக்கத்திற்கான 100 நாள் தீவிர பிரச்சாரம்.

காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ் 100 நாள் தீவிர பிரச்சாரம், மக்கள் பங்களிப்பு உணர்வுடன் காசநோய் ஒழிப்புக்கான ஒன்றுபட்ட அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகும். புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற காசநோய் இல்லா இந்தியா (100 நாட்கள் தீவிர பிரச்சாரம்) இயக்கத்திற்காக 21 அமைச்சகங்களுடன் கூட்டு உத்தி சார்ந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா இதனைத் தெரிவித்தார்.

மத்திய தொழிலாளர் நலன்,  வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் குமாரசாமி, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூயல் ஓரம்,  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.மத்திய சுகாதார அமைச்சகம் உட்பட மத்திய அரசின் அமைச்சகங்களின் செயலாளர்கள்; பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், கனரக தொழில்கள் மற்றும் எஃகு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பழங்குடியினர், ஆயுஷ், பஞ்சாயத்து ராஜ், கல்வி, நிலக்கரி, ரயில்வே, சுரங்கங்கள், கலாச்சாரத் துறை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய திரு நட்டா, “நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 என்ற காலக்கெடுவுக்கு முன்பே 2025 -ம் ஆண்டுக்குள் காசநோயை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் என்று கூறினார்.

காசநோயை ஒழிப்பதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்த திரு. நட்டா, “பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் முயற்சிகளும் காசநோயை ஒழிப்பதில் இந்தியாவை முன்னோடியாக மாற்றியுள்ளது” என்று தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, “இந்தியாவில் காசநோய் பாதிப்புகளின் குறைவு 17.7% ஆக உள்ளது. இது உலகளாவிய குறைவை விட இரு மடங்காகும். சிகிச்சை பாதுகாப்பு 53% முதல் 85% வரை அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் காசநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 28 லட்சத்திலிருந்து 22 லட்சமாக 21.4% குறைந்துள்ளது என்று திரு நட்டா குறிப்பிட்டார்.

Leave a Reply