வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா! தீவு நகரமான திருவரங்கத்தில் இரத்தினங்கியில் நம் பெருமாள்!

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடியகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் “சொர்க்க வாயில்” என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

தீவு நகரம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் “பகல்பத்து” என்றும் பிந்தைய பத்து நாட்களில் “இராப்பத்து” என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம் பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழா பரமபத வாசல் திறப்பு திருக்கொட்டகை பிரவேசம் இரத்தினங்கியில் பத்தி உலாத்தல் நடைபெற்றது.

Leave a Reply