இளைஞர்கள் தங்களை நம்ப வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
குருகிராமில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், எல்லாவற்றிலும் கேள்வி கேட்க வேண்டும், என்று கூறினார். நாட்டின் பொருளாதார, தொழில்துறை, வணிக சூழலை ஜனநாயகப்படுத்துவது இளைஞர்கள்தான் என்று அவர் தெரிவித்தார். இப்போது முன்னேற பரம்பரை தேவையில்லை எனவும், உங்களுக்கு குடும்பப் பெயர் தேவையில்லை எனவும், நல்ல யோசனையும் பிரத்யேக களமும் இருந்தால் போதும் எனவும் அவர் கூறினார்.
மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரின் தாயகமான பாரதத்திற்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் அதன் அதிகாரத்துவம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தை திறம்பட செயல்படுத்துவதில் இளைஞர்களின் பங்கை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை மீண்டும் வலியுறுத்தினார்,
கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியும் மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருப்பது குறித்து குறிப்பிட்ட திரு தன்கர், கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் வளர்ச்சியை அனுபவித்துள்ளனர் என்றார். 500 மில்லியன் மக்கள் வங்கிச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் 170 மில்லியன் பேர் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளதாகவும் கூறினார். இப்போது மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நமது பாரதம் இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் உலகில் வேறு எந்த நாடும் பாரதத்தைப் போல வேகமாக வளர்ந்ததில்லை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்