தில்லி கண்டோன்மெண்டில் உள்ள 61 குதிரைப்படை மைதானத்தில் இன்று (2025 ஜனவரி 19) குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தேசிய மாணவர் படையினர் (என்சிசி) பங்கேற்ற வருடாந்திர குதிரையேற்றப் போட்டி நடைபெற்றது.
தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் சிறப்பிடம் பெற்றவர்களுக்குக் கோப்பைகள், பரிசுகளை வழங்கி கௌரவித்தார். குதிரையேற்றத்தில் பயிற்சி பெறுவது என்சிசி கேடட்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் சாகசத்தை வெளிப்படுத்துகிறது. உறுதித் தன்மை, ஒழுக்கம், பொறுமை சகிப்புத்தன்மை போன்ற முக்கியமான பண்புகளை உருவாக்க உதவுகிறது.
பின்னர் பேசிய என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், கேடட்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஒருங்கிணைப்பு, வலிமை, ஒழுக்கம், நம்பிக்கை, உறுதித்தன்மை, சிறந்த விளையாட்டுத்திறன் போன்ற திறன்களை வளர்க்கவும் என்சிசி தற்போது 294 குதிரைகளை வைத்துள்ளது என்றார்.
திவாஹர்