இந்தியா – உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதால் புனித நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நகரில் இன்றையதினம் (19-01-2025) இடம்பெற்றுள்ளது.
மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறும் கூடாரத்திற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தையடுத்து பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தினால் உண்டான சேத விபரங்கள் இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பில் உத்தரபிரதேச மாநில பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
திவாஹர்