தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணிச்சலான பணியாளர்களின் தைரியம், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவையைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (19.01.2025) அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) நிறுவன நாளின் இந்த சிறப்பு வாய்ந்த சந்தர்ப்பத்தில், துன்பமான காலங்களில் கேடயமாக இருக்கும் துணிச்சலான பணியாளர்களின் தைரியம், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவைக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். உயிர்களைக் காப்பாற்றுவதிலும், பேரிடர்களின் போது உதவுவதிலும், அவசர காலங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. பேரிடர் மீட்பு, மேலாண்மை ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படை உலகத் தரத்தை அமைத்துள்ளது.
திவாஹர்