வேங்கைவயல் விவகாரம்!-தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்!- தொல் திருமாவளவன் வலியுறுத்தல்.

வேங்கைவயலில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும். ஆனால் காவல்துறை கடுமையான கெடுபிடிகளை கையாண்டு வருகிறது. அந்த ஊரை ஒரு தீவாக மாற்றி இருக்கிறார்கள். உள்ளே யாரும் நுழைய முடியாது வெளியே யாரும் போக முடியாது என்கிற அளவுக்கு வேங்கைவயல் தலித் மக்களை காவல்துறை தனிமைப்படுத்தி இருப்பது நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பது அதன் மூலம் மனஉளைச்சலை ஏற்படுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனே இதில் தலையிட வேண்டும். காவல்துறையின் கெடுபிடிகளை கைவிட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காலமாகி இருக்கும் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply