இந்தியக் கடலோரக் காவல்படை நாட்டிற்காக சுமார் 50 ஆண்டுகளாக மேற்கொண்ட அர்ப்பணிப்புள்ள சேவையைக் குறிக்கும் வகையில் 2025 பிப்ரவரி 01 அன்று தனது 49-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, நாட்டின் சேவையில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
1977-ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ஏழு தளங்களுடன், இந்திய கடலோர காவல்படை ஒரு வலிமைமிக்க சக்தியாக வளர்ந்துள்ளது, தற்போது 151 கப்பல்கள், 76 விமானங்கள் அவற்றிடம் உள்ளன. இது உலகின் முதன்மையான கடலோர காவல்படை சேவைகளில் ஒன்றாக அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவின் கடல்சார் மண்டலங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து உறுதி செய்துள்ளது. அதன் தொடக்கத்திலிருந்து, கடந்த ஆண்டில் மட்டும் 169 பேர் உட்பட 11,730 உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.
எம்.பிரபாகரன்