இந்தியாவின் நிலக்கரித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை உற்பத்தி மற்றும் விநியோகம் இரண்டிலும் நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஜனவரி 2025-ல் மொத்த நிலக்கரி உற்பத்தி 104.43 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 100.05 மெட்ரிக் டன்னை விட 4.38% அதிகமாகும். ஜனவரி 2025-ல் நிறுவனங்களின் சொந்த உற்பத்தி,வணிக மற்றும் பிற நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியன வலுவாக உள்ளன. உற்பத்தி 19.68 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 15.01 மெட்ரிக் டன்னாக இருந்தது. வளர்ச்சி 31.07% அதிகமாகும்.
ஜனவரி 2025 வரையிலான ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 830.66 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தின் உற்பத்தியான 784.51 மெட்ரிக் டன்னிலிருந்து 5.88% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இதேபோல், நிலக்கரி விநியோகித்தலும் இந்த வளர்ச்சியுடன் வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி 2025-ல் மொத்த நிலக்கரி விநியோகம் 92.40 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 86.92 மெட்ரிக் டன்னிலிருந்து 6.31% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள், நிலையான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதில் இந்தத் துறையின் வலுவான செயல்திறனை சுட்டிக் காட்டுகின்றன. நிலக்கரி அமைச்சகம், துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது.
திவாஹர்