இந்திய மகளிர் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் உலகளாவிய அடையாளத்தை உருவாக்குகின்றன என்று ஜிதேந்திர சிங் கூறுகிறார்.

இந்திய மகளிர் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் உலகளாவிய முத்திரையைப் பதிக்கின்றன மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இந்திய மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு – பெண்கள் அமைப்பு பிரவு பிரதிநிதிகளுடன் பேசும்போது தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், விண்வெளி போன்ற கடினமான துறைகளில் கூட, மகளிர் தலைமையிலான திட்டங்கள் உலகளவில் பாராட்டப்பட்டுள்ளன என்றும், இஸ்ரோவின் “சூரியப் பெண்” என்று அறியப்பட்ட நிகர் ஷாஜி தலைமையிலான இந்தியாவின் சூரிய சக்தி திட்டமான “ஆதித்யா எல் 1” ஐ உதாரணமாகக் குறிப்பிட்டு அமைச்சர் கூறினார்.

மகளிர் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் என்றும், நமது பெண் தொழில்முனைவோர் அந்த இலக்கை அடையும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Leave a Reply