2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “அணுசக்தி இயக்கம்” நாட்டின் எரிசக்தி துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அணுமின் உற்பத்தி இந்தியாவின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக மாற உதவும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுமின் உற்பத்தியின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டினர். எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு அணுமின் உற்பத்தி உதவிடும் என்று கூறினார்.
நாட்டின் அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். அணுசக்தி துறையின் மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தன்னிறைவு இந்தியா இயக்கத்தின் இலக்கை எட்ட உதவிடும் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா