தெலங்கானாவில் குடிநீர் திட்ட சுரங்கம் தோண்டும் பணியில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்துக்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இது ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (எஸ்எல்பிசி) என அழைக்கப்படுகிறது. இப்பணியில் 42 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகர் கர்னூல் மாவட்டம், தோமலபெண்டா 14-வது கி.மீ. அருகே சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று காலையில் முதல் ஷிப்ட்டில் பணியாற்றும் 50 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சென்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து 3 மீட்டர் வரை சுரங்கத்தினுள் மண் விழுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். 8 பேரின் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்தார். மேலும் மீட்புப் பணியை உடனே மேற்கொள்ள நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு படை, காவல்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திவாஹர்