அனைத்து அரசு பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படைப் பணி, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (போக்குவரத்து) ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள்  இன்று (பிப்ரவரி 24, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக  உருவாக்கும் முயற்சியில் அவர்களது பங்களிப்பு உள்ளது என்று கூறினார். இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் முழு நிர்வாக அமைப்பிற்கும் அடிப்படையாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை  கருத்தில் கொண்டு  பணிகளை  மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி-5 அத்தியாயம்-5 ஆனது நிறுவனத்தின் பங்கு, கடமைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே வேளையில், அரசியலமைப்புச் சட்டத்தின்  முகவுரை, இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் பதவிப்பிரமாணம் ஆகியவை ஒவ்வொருவருக்கும் அவர்களின் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் வழிகாட்டும் நெறிமுறைகளாக உள்ளன என்றும் அவர் கூறினார். புதுமையான தீர்வுகளுடன் பல்வேறு தரப்பினருக்கு வழிகாட்டவும் அவர் வலியுறுத்தினார். ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும் அவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

ரயில்வே சேவை அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நாட்டின் பெரும்பகுதி நாள்தோறும் ரயில்வே தடங்களில் பயணித்துக்கொண்டு இருப்பதாக  அவர் கூறினார். ரயில்வே சேவை அதிகாரிகள் என்ற வகையில், நமது பயணத்தை விரைவுபடுத்துவதிலும் அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியிலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிக எண்ணிக்கையிலான மக்களின் அன்றாட வாழ்க்கையை ரயில் சேவைகள் தீர்மானிப்பதாக அவர் எடுத்துரைத்தார். ரயில்வேயின் ஒட்டுமொத்த செயல்திறனுக்காக அவர்கள் முகவராகவும், சேவை வழங்குநராகவும் பணியாற்றி வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply