விண்வெளி கதிர்வீச்சு, கன அயனிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்களின் உயிரியல் விளைவுகள் குறித்த சர்வதேச கதிரியக்க உயிரியல் மாநாடு தொடங்கியது.

தில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் புதுதில்லியில் உள்ள ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும்  தொடர்புடைய அறிவியல் நிறுவனமானது

“விண்வெளி கதிர்வீச்சு, கன அயனிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்களின் உயிரியல் விளைவுகள் குறித்த சர்வதேச கதிரியக்க உயிரியல் மாநாட்டை ” நடத்துகிறது. மூன்று நாட்கள் நடைபெறும்

இந்த சர்வதேச மாநாட்டை மானெக்ஷா மையத்தில் இன்று  தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட்  தொடங்கி வைத்தார். மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை செயலாளரும், தலைவருமான டாக்டர் சமீர் வி. காமத் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதில் தொடக்க உரையாற்றிய பேராசிரியர் அஜய் குமார் சூட், இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த ஐஎன்எம்ஏஎஸ் நிறுவனத்தைப் பாராட்டினார். மேலும் விண்வெளி ஆய்வில் உள்ள சவால்களில் கதிர்வீச்சு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இது நீண்ட கால விண்வெளிப் பயணங்களின் போது விண்வெளி வீரர்களின் உடல்நலம், நலவாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக  உள்ளது என்று கூறினார்.

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை தலைவர் டாக்டர் சமீர் காமத் தனது உரையில், விண்வெளி கதிர்வீச்சுடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்ள பல்வேறு அறிவியல் துறைகளின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கும் அணுகுமுறை  தேவைப்படுகிறது என்றார். கதிரியக்கத்துறை சார்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரிடையே அறிவுசார் பரிமாற்றத்திற்கான தளமாகவும் இந்த மாநாடு அமைந்துள்ளதாக அவர் கூறினார். விண்வெளியில் கடினமான சூழல்களில் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வைப் பாதுகாக்க தேவையான புதுமையான தொழில்நுட்பங்களையும் தீர்வுகளையும் உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Leave a Reply