நமது நாட்டில் நடுவர் நடைமுறை, வழக்கமான அமைப்புக்கு கூடுதல் சுமையாக உள்ளது !- குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.

“நமது நாட்டில் நடுவர் நடைமுறை என்பது தீர்ப்பின் வழக்கமான படிநிலை அமைப்புக்கு கூடுதல் சுமையாக உள்ளது” என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய சர்வதேச நடுவர் மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றிய திரு தன்கர், “நடுவர் செயல்முறையுடன் தொடர்புடைய வழக்குரைஞர்களின் உறுப்பினர்களைப் போலவே நடுவர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றார்.

நாட்டில் ஒவ்வொரு அம்சத்திலும் வளமான மனித வளம் உள்ளது என்று அவர் கூறினார்.  சர்ச்சைகள் துறை சார்ந்த அனுபவத்துடன் தொடர்புடையவை என அவர் தெரிவித்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்டில் மத்தியஸ்தம் என்பது தீர்ப்பு என்பது போல மிகவும் குறுகிய  பார்வையை நாம் கொண்டுள்ளோம் என அவர் கூறினார். இது தீர்ப்புக்கு அப்பாற்பட்டது எனவும் இது உலக அளவில் வரலாற்று ரீதியாக மதிப்பிடப்பட்ட வழக்கமான தீர்ப்பு அல்ல என்றும் அவர் கூறினார்.

நடுவர் தீர்ப்பில் துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பின் அவசியத்தை திரு தன்கர் வலியுறுத்தினார். நடுவர் செயல்பாட்டில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் பங்கேற்பதை அவர் குறிப்பிட்டார்.  இந்த நாட்டின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் நடுவர் செயல்முறைக்கு சொத்து என அவர் குறிப்பிட்டார்.

உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் இந்தியா வளர்ந்து வரும் நேரம் இது என்று அவர் கூறினார். உலகளாவிய தகராறு தீர்வு மையமாக இந்தியா ஏன் உருவாகக்கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு பொருளாதார நடவடிக்கையிலும் வேறுபாடுகள், சர்ச்சைகள் இருக்கும் எனவும் விரைவான தீர்வுகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் தீர்ப்பளிப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என்று திரு ஜக்தீப் கூறினார்.

Leave a Reply