தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளில், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025- 2026 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு சேர்க்கை படிவத்தை வழங்கி, மாலை அணிவித்து கல்வி கற்க வரவேற்றார்.