தமிழக அரசு திருத்தணி ம.பொ.சி சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட்டின் பெயரை மாற்ற முயற்சிக்கக்கூடாது!- ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு, பெருந்தலைவர் பெயருக்கும் புகழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளாக திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு காய்கறி மார்க்கெட் உள்ளது.

இது பெருந்தலைவர் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.

இப்போது இந்த மார்க்கெட் பராமரிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் போது கலைஞர் நூற்றாண்டு மார்க்கெட் என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

காரணம் பல ஆண்டுகளாக இருந்த ஒரு பெயரை அதுவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாட்டிற்காக அர்ப்பணிப்போடு வாழ்ந்தவருமான பெருந்தலைவர் பெயர் கொண்ட அந்த மார்க்கெட் அப்பகுதிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது.

அப்படி இருக்கும்போது காமராஜர் பெயர் கொண்ட அந்த மார்க்கெட்டுக்கு கலைஞர் நூற்றாண்டு மார்க்கெட் என பெயர் சூட்ட முயற்சி செய்வது ஏற்புடையதல்ல.

குறிப்பாக காமராஜர் காய்கறி மார்க்கெட் பெயர் மாற்றமில்லாமல் தொடரவும், ஏற்கனவே அகற்றப்பட்ட மகாத்மா காந்தி திருஉருவச் சிலையை காமராஜர் மார்க்கெட் அருகாமையிலேயே வைக்க வேண்டும் என்றும் வியாபாரிகளும், பொது மக்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

எனவே தமிழக அரசு, பெருந்தலைவர் காமராஜர் பெயரும், புகழும் நீடிக்க தொடர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமே தவிர பெருந்தலைவர் பெயர் மாற்றம், நீக்கம் சம்பந்தமான எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply