சைபர் போர், விண்வெளி அடிப்படையிலான சவால்கள், நாடுகடந்த திட்டமிட்ட குற்றங்களின் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இருக்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன மையத்தில் (டி.ஆர்.டி.ஓ.) ‘உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்’ குறித்த உள்துறை அமைச்சகம் – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய மாநாடு மற்றும் கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு, பேரிடர் மீட்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை இந்த நிகழ்வு வழங்கியது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், உலகில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் வளர்ந்து வருகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு  ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருப்பது அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார். “நவீன உலகில் பாதுகாப்பு சவால்கள் விரைவாக உருவாகி வருகின்றன என்று அவர் கூறினார். பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடையே முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விண்வெளி அடிப்படையிலான சவால்கள் மற்றும் நாடுகடந்த திட்டமிட்ட குற்றங்கள் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் இருக்க வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினார். நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது பயங்கரவாதம், பிரிவினைவாத இயக்கங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் போன்ற வழக்கமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார மற்றும் உத்திசார் நலன்களை சீர்குலைக்கக்கூடிய வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply