ஐஎன்எஸ் சில்காவில் ஐந்தாவது அக்னிவீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நாளை நடைபெறுகிறது.

அக்னிவீரர்களின் ஐந்தாவது தொகுதியின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு  நாளை (07 மார்ச் 2025) ஐஎன்எஸ் சில்காவில் நடைபெறவுள்ளது. சில்காவில் 5-வது தொகுதியில் பெண் அக்னிவீரர்கள் உட்பட 2972 அக்னிவீரர்கள் பயிற்சி பெற்றனர். தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி திரு வி.ஸ்ரீனிவாஸ் தலைமை விருந்தினராக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

இந்த வீரர்கள் 16 வார கால கடற்படை பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். போருக்கான தயார்நிலையுடன், கடற்படையில் அவர்கள் தங்களது பயணத்தைத் தொடங்கவுள்ளனர். இந்தப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு, கடற்படையின் யூடியூப் அலைவரிசை, முகநூல்  பக்கம், மண்டல தூர்தர்ஷன் அலைவரிசை ஆகியவற்றில் 07 மார்ச் 2025 அன்று மாலை 5.30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

Leave a Reply