டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், மின்னணு உற்பத்தி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தி இந்தியா தனது டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ), செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி, மின்னணு உற்பத்தி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா தனது டிஜிட்டல் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அனைவரும் படித்துப் பாருங்கள்!”
எஸ்.சதிஸ் சர்மா