எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முயற்சிகள்.

மின் உற்பத்திக்குத் தேவையான இயற்கை எரிவாயு கிடைப்பதை அதிகரிப்பதற்காக, திரவ இயற்கை எரிவாயுவை திறந்தவெளி பொது உரிமம் பிரிவின் கீழ் அரசு வைத்துள்ளது. இதன்மூலம், மின் உற்பத்தி நிலையங்கள் விநியோகஸ்தர்களுடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக விதிமுறைகளின் அடிப்படையில் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. 2024-25 (ஏப்ரல்-ஜனவரி) காலகட்டத்தில் மின் நிலையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு, நாளொன்றுக்கு சுமார் 9.58 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கனமீட்டர் ஆகும்.  உச்சக்கட்ட மின் தேவை காலங்களில் எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து போட்டி விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான திட்டங்களை அரசு அவ்வப்போது கொண்டு வந்துள்ளது.

எரிசக்தி தொகுப்பில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரிக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளில் தேசிய எரிவாயு குழாய் விரிவாக்கம், நகர எரிவாயு விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்துதல், திரவ இயற்கை எரிவாயு முனையங்களை அமைத்தல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (போக்குவரத்து) / குழாய் மூலம் இயற்கை எரிவாயு (உள்நாட்டு) சிஎன்ஜி (டி) / பிஎன்ஜி (டி) ஆகியவற்றுக்கு வீட்டு எரிவாயுவை ஒதுக்கீடு செய்தல் ஆகியவை அடங்கும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு. சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Leave a Reply