2024-25க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி பருவங்கள்) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

2024-25-க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்களுக்கு ஒப்புதல் அளித்து அவற்றை வெளியிட்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வேளாண் துறையின் மேம்பாட்டிற்கு தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது என்றார். பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவிகளையும் ஊக்கத்தையும் வேளாண் அமைச்சகம் அளிப்பதால், வேளாண் பயிர்கள் உற்பத்தி சாதனை அளவாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

கரீஃப் பருவ உணவு தானிய உற்பத்தி 1663.91 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்றும், ரபி பருவ உணவு தானிய உற்பத்தி 1645.27 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

கரீஃப் பருவ அரிசி உற்பத்தி 1206.79 லட்சம் மெட்ரிக் டன்(சாதனை அளவு)என மதிப்பிடப்பட்டு உள்ள நிலையில், 2023-24-ல் உற்பத்தியான 1132.59 லட்சம் மெட்ரிக் டன் என்பதுடன் ஒப்பிடும்போது, 74.20 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அதிகமாகும்.

ரபி பருவ அரிசி உற்பத்தி 157.58 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். கோதுமை உற்பத்தி 1154.30 லட்சம் மெட்ரிக் டன்(சாதனை அளவு)என மதிப்பிடப்பட்டு உள்ளது.

கரீஃப் பருவ சிறுதானிய உற்பத்தி 137.52 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், ரபி பருவ சிறுதானிய உற்பத்தி 30.81 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கரீஃப் பருவ நிலக்கடலை உற்பத்தி 104.26 லட்சம் மெட்ரிக் டன் (சாதனை அளவு) ஆகவும், ரபி பருவ நிலக்கடலை உற்பத்தி 8.87 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட முதல்நிலை தகவல்கள் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்கால பயிர்கள் உற்பத்தி முன்கூட்டிய 3-வது மதிப்பீடுகளில் சேர்க்கப்படும்.

Leave a Reply