நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயுர்வேத ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக விடாங்கடி லாஹம் என்ற ஆயுர்வேத மருந்தின் திறன் குறித்து மதிப்பீடு செய்ய கொல்கத்தாவில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆய்வு நிறுவனமானது ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இயற்கை பொருட்களின் ஆய்வுப்பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஆய்வு இந்தியாவின் வளமான மருந்துவச் செடிகள் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மீட்கவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும். நீரிழிவு நோயையும் அதன் விளைவுகளையும் எதிர்த்து முறியடிக்க சிறப்பான உயர்தரமுள்ள பாதுகாப்பான ஆயுர்வேத மருந்துகளை உருவாக்குவதில் இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியமானவையாக இருக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வில் கொல்கத்தாவில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி பாபு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இயற்கை பொருட்களின் ஆய்வுப்பள்ளியின் உதவி இயக்குநர் டாக்டர் அனுபம் மங்கள், ஆய்வு அதிகாரி டாக்டர் லால்ரின் புய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திவாஹர்