இலங்கை வலி வடக்கில், உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்று மாறும், வடக்கில் தமது நிலங்களை விடுமாறும் கோரி, 15.02.2013 அன்று யாழ். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எற்பாட்டில், மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவை சேனாதிராசா, மனோகனேஷன், ரணில் விக்கிரமசிங்க, விக்கிரமபாகு கருணாரட்ன, என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் சீருடை அணிந்த இராணுவத்தினர் நுழைந்து, ஊடகவியலாளர்களின் கமராக்களை அடித்து நொருக்கியதுடன், கலந்து கொண்ட தமிழ் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தினையடுத்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் பேச்சுவார்த்தினை மேற்கொண்டதின் பேரில், இராணுவத்தினரால் அடித்து உடைக்கப்பட்டு பறித்துச் செல்லப்பட்ட உதயன் இணைய ஊடகவியலாளர்களின் கமரா ‘மெமறிக் காட்‘ கழற்றி எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.