கால்களால் விமானம் ஓட்டும் உலகின் முதல் சாதனைப் பெண் !

jacika

வெறுங்கை என்பது மூடத்தனம் நம் விரல்கள் பத்தும் மூலதனம் என்று சொல்வார்கள். ஆனால் அந்த விரல்கள் பத்தும் கூட இல்லாமல் அவ்வளவு ஏன் தோள்பட்டையில் இருந்து இரண்டு கைகளும் முழுவதுமாக இல்லாமல் வெறும் தன்னம்பிக்’கை’யை மட்டும் மூலதனமாகக் கொண்டு வாழும் ஒரு சாதாரணமான பெண்மணியைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்க போகிறோம். ஆம் அவருக்கு சாதனைப் பெண், அபூர்வமான பெண் என்று அடைமொழி வைத்து கூப்பிட்டால் பிடிக்காது.

jacika.jpg1 அவர் பெயர் ஜெசிகா காக்ஸ், அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் 1983-ம் ஆண்டு பிறந்த ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார்.

jacika.jpg2jpg பிறக்கும்போதே பெயரும் , காரணமும் தெரியாத ஒரு வியாதியால் இரு கைகளும் இல்லாமல் தான் பிறந்தார். ஆனால் அளவுக்கு அதிகமாகவே தன்னம்பிக்’கை’யை பிறக்கும்போது கூடவே அழைத்து வந்திருந்தார்.

jacika.jpg3pg அவருக்கு அழகான குடும்பம் இருக்கிறது. அம்மா பெயர் இனீஸ் தந்தை பெயர் வில்லியம் சகோதரர் ஜாசன் சகோதரி ஜாக்கி. குடும்பமே ஜெசிகாவிற்கு உறுதுணையாக உள்ளது. ஜெசிகாவின் பெற்றோர் அவரை பல மருத்துவர்களிடம் அழைத்து போனார்கள் எதனால் இந்த வியாதி என்கிற காரணத்தை அறியவும் செயற்கை கையை பொறுத்த முடியுமா என்றும் முயற்சி செய்து பார்த்தார்கள் ஆனால் சில பல காரணங்களால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

jacika.jpg4pg அந்த குழந்தை ஜெசிகாவும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயல்பாகவே வாழ பழகிக்கொண்டார். கைகளால் செய்யும் அனைத்து வேலைகளையும் பல் துலக்குவது குளிப்பது உடைகள் அணிவது தலை வாருவது சாப்பிடுவது என்று அனைத்தையுமே கால்களால் செய்ய பழகிக் கொண்டார். கொஞ்சம் வயது ஆனதும் நீச்சல், ஸ்கேட்டிங்,
அலைச் சறுக்கு விளையாட்டு, என்று சராசரி மனிதர்கள் செய்ய கஷ்டப்படும் விளையாட்டுகளைக் கூட அனாயாசமாக செய்கிறார். இது மட்டுமில்லாமல் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார் பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார்.

jacika.jpg5pg நன்றாக பயிற்சி பெற்று கால்களாலேயே காரும் ஓட்டுகிறார் லைசென்ஸ் பெற்றுதான். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்திருக்கிறது ஜெசிகா காக்ஸ் ன் இன்னொரு சாதனை ஆம் இரு கைகளும் இல்லாத உலகின் முதல் பெண் விமான ஓட்டி என்கிற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர்.

jacika.jpg6pg எல்லாவற்றையும் விட, உச்சகட்ட சாதனையாக குறைந்த எடையுள்ள விமானத்தை கால்களால் இயக்கியபடியே 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, உலக அளவில் இந்த சாதனையை படைத்த ஒரே நபர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்திலும் ஜெசிகா காக்ஸ் தனி இடம் பிடித்துள்ளார்.

jacika.jpg8pg முதலில் இவருக்கு விமானம் ஓட்ட அனுமதி இல்லை ஆனால் கடும் முயற்சிக்கும், பயிற்சிக்கும் பிறகு மிகவும் லாவகமாகவும் கவனமாகவும் கால்களாலேயே விமானம் ஓட்டுகிறார். கேட்பதற்கே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது அல்லவா இது வெறும் சாதனை முயற்சி மட்டுமில்லை உயிரை பணையம் வைத்து செய்யும் சாகச முயற்சியும் கூட . ஆனால் ஜெசிகா காக்ஸ் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிறகுகள் இல்லாத சாதனைப் பறவையாக வானில் பறக்க தொடங்கிவிட்டார்.

jacika.jpg9pg வாழ்வின் உன்னத நிலையை அடைவதற்கு ஊனம் ஒரு தடையே அல்ல’ என்பதை செயல் வடிவில் நிரூபித்துள்ள இவர், உலகில் உள்ள 17 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு மன வலிமையை ஊட்டும் வகையில் கருத்தரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார்.

jacika.jpg10pg இவரது தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் பற்றி அறிந்த 16-ம் போப் பெனடிக்ட், ஜெசிகாவை வாட்டிகன் அரண்மனைக்கு வரவழைத்து பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.

jacika.jpg11pg தற்போது 30 வயதாகும் ஜெசிகா காக்ஸ், வாழ்வின் எஞ்சிய காலத்தில் மென்மேலும் பல சாதனைகளை படைத்து வரலாற்றில் இடம் பிடிப்பார் என அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறுகிறார்.

jacika.jpg12pgjacika.jpg13pgjacika.jpg14jpg

ஆனால், அவரை நான் சாதனைப் பறவை என்று சொன்னதை அவரிடம் சொல்லி விடாதீர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார். சாதாரண பறவை என்று சொன்னால் தான் ஒப்புக் கொள்வார். ஜெசிகா காக்ஸ் அவர்களே நீங்கள் உண்மையிலுமே ஒரு புதுமை பெண் தான்.
                                                                                        

  -ஆர்குட்

Leave a Reply