டெல்லியில் பெண்கள் தின நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டியதுடன், பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வதிலும், மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நகரில் நடைபெறாமல் தடுக்கவும் டெல்லி போலீசார் தைரியத்துடனும், உறுதிப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது என்றாலும், டெல்லி நகரில் வசிப்பதை எனது மகள் அசவுகரியமாகக் கருதுகிறாள் என்றும் அந்தளவுக்கு டெல்லி நகரில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் ஷீலா தீட்சித் தெரிவித்தார். முதல்வரே இப்படி பேசியுள்ளது டெல்லி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.