ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் போராட்டம் !

Photo0102 Photo0103 சிங்கள அதிபர் இராஜபக்க்ஷேவின் மனித உரிமை மீறலையும் இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரில் அப்பாவி ஈழத் தமிழர்கள் ஈவு இறக்கமின்றி படுகொலை செய்யப்பட்டதையும், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன் படுத்தி போர்குற்றம் செய்த இலங்கை இராணுவத்தினர் மீது சர்வதேச விசாரணை கோரி சர்வதேச அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் தமிழகத்தில் லயோலா கல்லூரி மாணவர்கள் பற்ற வைத்த போராட்ட தீ நாடு முழுவதும் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (13.03.2013) திருச்சி காட்டூர் ( UDC) உருமு தனலெஷ்மி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. இப்போராட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்களும், முன்னாள் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Photo01041.அகஸ்டின் 2. திருமுருகன்  3. சுதாகர் 4. மனோகர் 5.அருள் 6.லிஜோர் ஆகிய மாணவர்கள் 6 பேரும் கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி முதற் கட்டமாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

கோரிக்கைகள் விபரம் :

1.அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். .நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே.

Photo0113

2.இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டுமல்ல. அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3.சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொது வாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிந்து கொண்டு வரவேண்டும்.

4.சிங்கள இனவெறி அரசின் துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டு வரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாராத் தடை விதிக்க வேண்டும்.

6.உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக் குழுவில் இடம் பெறக்கூடாது.

8.  தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

-கோ.லஷ்மிநாராயணன்

 

 

Leave a Reply