ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது குறித்து இப்போதைக்கு சொல்ல ஏதுமில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று (19.03.2013) காலை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு, இது குறித்த தகவல் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது,.
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு வெளியில் வந்த சோனியாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, திமுக விலகல் பற்றி இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்.