ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. எம்.பி.க்கள் விலக்கிக் கொண்டதையடுத்து, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களின் தயவை மத்திய அரசு எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், லக்னோவில் இன்று (23.03.2013) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:-
நாட்டில் வளர்ந்து வரும் ஊழல்களுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். உத்தரபிரதேச மந்திரிகள் தங்களது கடமையை செய்ய தவறி விட்டதாக பா.ஜ.க. தலைவர் அத்வானி என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார். அத்வானி நேர்மையான தலைவர். அவரது வார்த்தைகளை நான் நம்புகிறேன். உத்தரபிரதேச மாநில மந்திரிகள் தங்களது கடமையை ஒழுங்காக செய்வதற்கு இனியாவது முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.