பள்ளி வகுப்பை புறக்கணித்து விட்டு உய்யகொண்டான் வாய்காலில் குளித்த 8 மாணவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்! – ஒருவர் மாயம்!

20180102_112149

உயிரிழந்த மாணவன் ஸ்ரீகரன்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் காட்டூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஸ்ரீகரன் (வயது14) இவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் இவனது வகுப்பு நண்பர்கள் மற்றும் 7-ம் வகுப்பு படிக்கு நண்பர்கள் என அதேப் பகுதியை சேர்ந்த முகேஷ், காலனிதெருவை சேர்ந்த சாமிநாதன், அண்ணாநகரை சேர்ந்த இமாம் அலி, எல்லக்குடியை சேர்ந்த அகஸ்டீன்ராஜ், கொக்கரசன்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் மணி ஆகிய 7 பேர் இன்று காலை பள்ளிக்கு வந்துள்ளனர்.

அப்படி பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி வீதி வடங்கம் பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்காலில் குளித்துள்ளனர்.

அப்படி குளித்ததில் ஸ்ரீகரன் தண்ணீரில் மூழ்கினான், இதை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் அகஸ்டீன்ராஜ் மட்டும் தப்பி சென்றானா? (அல்லது) தண்ணீரில் மூழ்கினானா? என்று தெரியவில்லை.

இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் உள்ளுர் மக்கள் உதவியுடன் ஸ்ரீகரன் உடலை மீட்டனர்.

மேலும், சிலர் தண்ணீரில் மூழ்கி இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், திருச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், ஸ்ரீகரன் தவிர மற்ற மாணவர்கள் தப்பி விட்டதாக தகவல் கிடைக்கவும் ஆற்றில் இறங்காமல் திரும்ப சென்று விட்டனர்.

இச்சம்பவம் காட்டூர் பகுதியில் காட்டு தீயாக பரவியது இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பலர் தமது மகனாக இருக்குமோ என்று பள்ளிக்கு படையெடுத்ததோடு பள்ளி வகுப்பறையில் பிள்ளைகள்  இருப்பதை உறுதி செய்த பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும், பள்ளி வகுப்பை புறக்கணித்து விட்டு மாணவர்கள் சென்ற சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர், ஆதிதிராவிட நலத்துறை திருச்சி தாசில்தார் சிவசுப்பிரமணியப்பிள்ளை ஆகியோருக்கு தகவல் கிடைத்ததும், பள்ளியில் இருந்த மாணவன் பள்ளியை விட்டு எப்படி வெளியேறினான் என்பது குறித்து விசாரணை செய்வதற்காக பள்ளிக்கு வந்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டதோடு பள்ளி நிர்வாகத்தையும் ஆய்வு செய்தனர். இதனால் பள்ளியில் பரப்பரபு ஏற்பட்டது

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகரன் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அகஸ்டீன்ராஜ் எங்கே என்றும் திருவெறும்பூர் போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply