புதுடில்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிதி ஆயோக் (NITI Aayog) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி இன்று கலந்துக்கொண்டார்.
அபிவிருத்தி திட்டங்களில் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களை விரைவாக மாற்றுவதற்கான ஒரு பெரிய கொள்கை முன்முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுக்குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஊட்டச்சத்து, கல்வி, அடிப்படை உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் நீர்வள ஆதாரங்கள், இடதுசாரி தீவிரவாதத்தை ஒழித்தல், நிதி சேர்க்கும் திறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மீது அதிகாரிகள் விளக்கங்கள் அளித்தனர்.
பொதுமக்களின் பங்கேற்புடன், அரசாங்கத்தின் திட்டங்களை செயல்படுத்தி, மக்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இன்னும் மூன்று மாதங்களில் அதாவது வரும் ஏப்ரல் 14 – ம் தேதி பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த நாளுக்குள், நல்ல செயல்திறன் கொண்ட மாவட்டங்களை நேரில் பார்க்க வேண்டும். 2022 -க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாக அவை மாறும் என்று, பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.