வருவாய் உயர்நிலை அலுவலர்கள் அரசாணையை மதிக்காமல் நடப்பதை தடுக்க, தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடாமல் இருப்பதை கண்டித்து ஏழு கட்ட போராட்டங்கள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டும் அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.
இதனை கண்டித்து மாநில மையம் முடிவு செய்தள்ளதுபடி இன்று (8-ம் தேதி) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நாளை (9-ம் தேதி) காலை 6 மணிவரை இரவு நேர தர்ணா போராட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகம் முன்பு நடைப்பெறுகிறது.
இதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், 10-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிடுவது, அதற்கும் செவி சாய்க்கவில்லை என்றால், கிராம நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர்கள் வரும் 18-ம் தேதி முதல் கால வரையறையற்ற விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்துள்ளனர்.
மேலும், ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேஷ்டி- சேலைகளை வட்ட அலுவலகங்களில் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் சொந்த செலவில் எடுத்துச் சென்று வழங்குவதில்லை இதை வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன் ஒருப்பகுதியாக திருவெறும்பூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் திருச்சி கிழக்கு வட்டம் சார்பில், திருவெறும்பூர் வட்ட அலுவலகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு, திருச்சி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் அந்தோணிதுரை தலைமை தாங்கினார். போராட்டதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.