திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த அரசுப்பேருந்தை போக்குவரத்து தொழிலாளர்கள் மறித்தனர்.
இதனால் அரசுப்பேருந்தை ஓட்டி வந்த தற்காலிக ஓட்டுனர் பயந்துபோய் அங்கேயே பயணிகளோடு பேருந்தை நிறுத்திவிட்டு ஓடினார்.
பின்பு காவல்துறையினர் முயற்சியால், தனியார் ஓட்டுனரை பிடித்து மீண்டும் அரசுப்பேருந்து இயக்கப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வன்முறையாக மாறும் சூழல் உருவாகி வருகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு தற்போது கேள்வி குறியாகியுள்ளது.
– ரா.ரிச்சி ரோஸ்வா.