குஜராத் மாநிலம், சபர்கந்த மாவட்டத்தில், வதோதாவில் இந்திய-இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் செயல்பட்டு வரும் காய்கறிகளுக்கான சிறப்பு மையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ ஆகியோர் பார்வையிட்டனர்.காய்கறி மையத்தின் பல்வேறு சாதனைகளை பற்றி அவர்கள் சுருக்கமாக கூறினர்.
விவசாயத்துறையை மையமாக கொண்டு ஒரு நாட்டை எப்படி மாற்றுவது என்பதை இஸ்ரேல் காட்டியுள்ளது. விவசாயத் துறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது முக்கியம். 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்துவதில் இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோதி கோடிட்டுக் காட்டினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.