திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை மேம்பால அதிர்வுகளை சரி செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்துகள் ஏற்படாமல் இருக்க ரயில்வே இருப்பு பாதை துறையும், மாநில நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், செவலூர் பிரிவு, நொச்சிமேடு அருகிலும் ரவுண்டான அமைக்க வேண்டும்.
மேம்பாலத்திற்கு கீழ் பொதுமக்கள் சந்தைக்கு செல்லும் வகையில் குறுக்குப் பாதை அமைத்து தர வேண்டும்.
மணப்பாறை காட்டுப் பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் கொண்டு வருவதற்கு தடைகளை நீக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் மணப்பாறை நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமை உரையாற்றினார். ஜனசக்தி ஆசிரியர் மற்றும் மாநில நிர்வாகி த.இந்திரஜித் சிறப்புரையாற்றினார்.
-மு.துளசி மணி.